Wednesday, March 2, 2011

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டமா?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இந்தப் போட்டி டை ஆகும் என்று முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சரியாகக் கணித்திருந்தார். அவர் துல்லியமாக எப்படி கணித்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
கிரிக்
கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது. ஆட்டமா? சூதாட்டமா? என்பது போல் கிரிக்கெட் தன் முகம் மாறி வருவதையடுத்து உலக கிண்ண கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இருப்பினும் கடந்த பெப்ரவரி 25 ல் அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான முதல் சுற்று போட்டி அஹ்மதாபாத்தில் நடந்தது. முதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து முதலில் மந்தமான துவக்கம் கொடுத்தனர். முதல் 11 சுற்று பந்துவீச்சில் 28 ஓட்டங்கள் தான் எடுத்தனர். 15 சுற்றின் முடிவில் 53 ஓட்டங்கள் எடுத்தனர். இதெல்லாம் ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் குழுமத்துக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதனை அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டிம் நீல்சன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "எல்லோரும் வாட்சன், ஹாடின் மெதுவாக விளையாடியது குறித்து தான் பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நன்றாகத்தான் விளையாடினர். ஜிம்பாப்வே அணியினர் துவக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியதால், இழப்பின்றி எங்களைப் பாதுகாக்க வேண்டியது இருந்தது. எங்களைப் பொறுத்தவரையில் சரியாகத்தான் விளையாடினோம்" என்றார்.
அதே நேரம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி டை ஆகும் என போட்டி துவங்குவதற்கும் ஏழு மணி நேரம் முன்னதாக ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய வீரர் வார்ன் கணித்ததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பாராட்டினாலும் பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் ஒருவர் கணிக்கும் போது யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று தான் கூற முடியும். மாறாக வார்ன் மட்டும் டை ஆகும் என்று எப்படி சொன்னார் என்பது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
சூதாட்ட சந்தேகம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் அமிர் சொகைல் கூறுகையில்,"போட்டி டை ஆகும் என இந்தியா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் யாராவது தெரிவித்து இருந்தால் இந்நேரம் மேற்கு நாடுகளின் ஊடகங்கள் பெரிய அளவில் விவாதித்து குதித்திருக்கும். ஆனால் சொன்னது அவுஸ்திரேலியா வீரர் என்றவுடன் ஜீனியஸ் என்கிறார்கள்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

Template by:
Free Blog Templates