Tuesday, March 1, 2011

கென்யாவை மிக இலகுவாக வெற்றி கொண்டது இலங்கை அணி


இலங்கை மற்றும் கென்யா ஆகிய அணிகளுக்கு இடையே ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற 14ஆவது உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் கென்ய அணியை வெற்றி கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கென்யா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய கென்ய அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்படி இலங்கை அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கென்ய அணி சார்பாக கொலின் ஒபுயா 52 ஓட்டங்களையும் டேவிட் ஒபுயா 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லசித் மாலிங்க 7.1 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக லசித் மாலிங்க அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனையையும் படைத்தமை விசேட அம்சமாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க ஆட்டம் இழக்காது 67 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Template by:
Free Blog Templates