வங்கதேசம் தனது மோசமான பேட்டிங்கினால் 58 ரன்களுக்கு 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய அணி 12.2 ஓவர்களில் டெவன் ஸ்மித் (6) விக்கெட்டை இழந்து 59 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்டம் மொத்தம் 31.1 ஓவர்களே நீடித்தது. பகலிரவு ஆட்டமான இது பகலிலேயே முடிந்தது. மொத்தம் 187 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஒருநாள் போட்டி ஒன்று முடிவை எட்டியது இரண்டாவது மிகக்குறைந்த ஆட்ட நேரமாக இருக்கலாம். ஏனெனில் 2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கனடாவுக்கு எதிராக இலங்கை ஆடிய ஆட்டம் இதனை விடவும் குறைவான நேரத்தில் முடிந்ததற்கான வாய்ப்பு உள்ளது.
கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் டேரன் பிராவோ ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கேமர் ரோச் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக இவர் 2-வது ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய அணி 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளின் மூலம் 4 புள்ளிகள் பெற்று இரண்டத்திற்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம் 2 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment