Tuesday, March 1, 2011

இன்றயை போட்டியில் இங்கிலாந்தை சமாளிக்குமா அயர்லாந்து?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன. இந்த ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
பி பிரிவில் இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன், கத்துக்குட்டி அணியான அயர்லாந்தை சந்திக்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை வென்றது இங்கிலாந்து. இந்தியாவுடன் மோதிய 2-வது ஆட்டம் சமநிலையில் முடித்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து 3-வது ஆட்டத்தில் களம் காணவுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், இயன் பெல், டிராட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்தியாவுடனான ஆட்டத்தில் ஸ்டிராஸ், பெல் ஆகியோர் அபாரமாக விளையாடினர். எனவே இங்கிலாந்து வீரர்களை சமாளிப்பது அயர்லாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும்.
அதேபோல பந்துவீச்சில் டிம் பிரெஸ்னன், கிரீம் ஸ்வான் ஆகியோரும் எதிரணியை பயமுறுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் அயர்லாந்து தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வி கண்டது.
இந்த நிலையில் இது அந்த அணிக்கு 2-வது ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற அயர்லாந்து அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த அணியின் துடுப்பாட்ட வரிசை கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. வங்கதேசத்துடனான ஆட்டத்தில் அந்த அணி 205 ரன்களுக்குச் சுருண்டது. அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தில் தன்னை மெருகேற்றிக் கொண்டால், இங்கிலாந்துக்கு சவால் விடலாம்.
அயர்லாந்து அணியின் கேப்டன் இன்றைய போட்டி குறித்து தெரிவிக்கையில்,
தோல்வியிலிருந்து மீண்டும் வெற்றியைப் பெற முயல்வோம். இங்கிலாந்துடனான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம். வங்கதேசத்துடனான தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றார் அவர்.

இங்கிலாந்து அணி வீரர் இயன் பெல்
அயர்லாந்து அணி வீரர்களின் பலம், பலவீனம் எங்களுக்குத் தெரியும். அந்த அணியுடன் கவுன்ட்டி ஆட்டங்களில் நாங்கள் விளையாடியுள்ளோம். அந்த அணியை எளிதில் வெல்வோம். இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்கும் தீர்மானத்தில் இங்கு வந்துள்ளோம் என்றார் அவர்

No comments:

Post a Comment

Template by:
Free Blog Templates