மொத்தம் 66 லட்சம் டிக்கெட்டுகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஏப்ரல் 26 ம் திகதி வரை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும். 25 லட்சம் மக்கள் டிக்கெட்டுகள் கேட்டுள்ளனர் என 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் தலைவர் லார்டு கோ தெரிவித்துள்ளார்.
விற்பனையில் முதல் நாளிலேயே சென்றால் தான் டிக்கெட் கிடைக்கும் என்ற கவலை வேண்டாம். போட்டியை பார்க்க விரும்புபவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு இருப்பதாகவே நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேசப் போட்டியில் டிக்கெட் மோசடி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற அச்சுறுத்தல்களும் உள்ளன. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இத்தகைய முறைகேடான நடவடிக்கையை மேற்கொள்பவர்களுக்கு 5 ஆயிரம் பவுண்ட் அபராதம் 20 ஆயிரம் பவுண்ட் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் டிக்கெட் மோசடி விற்பனையை தடுக்க லண்டனில் கடந்த வாரம் பொலிசார் தொடர் சோதனை நடத்தினர்.
டிக்கெட்டுகளை இணையதளம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment