உலக கிண்ணத்தில் அறிமுகப்படதவுள்ள புதிய நடைமுறைகள் அறிமுகம்
உலகக் கோப்பை போட்டிகளின் போது நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை (யூ.டி.ஆர்.எஸ்.), சூப்பர் ஓவர் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
யூ.டி.ஆர்.எஸ். முறையின் மூலம் ஒரு வீரருக்கு நடுவர் அவுட் கொடுத்தபிறகு, அதில் சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட வீரர், கள நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மூன்றாவது நடுவரிடம் கோரலாம்.
நாக் அவுட் சுற்றில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டையில் முடிந்தால், அதன்பிறகு இரு அணிளுக்கும் தலா ஒரு ஓவர் (சூப்பர் ஓவர்) வழங்கப்படும். அதில் வெற்றிபெறும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.
யூ.டி.ஆர்.எஸ். முறை, சூப்பர் ஓவர் முடிவு ஆகியவற்றை வரவேற்பதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
யூ.டி.ஆர்.எஸ். முறை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அதுவும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முறை செயல்படுத்தப்பட்டது. இப்போது முதல் முறையாக உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
யூடிஆர்எஸ் முறைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment