Thursday, February 3, 2011

இங்கிலாந்துக்கு எதிராக 333 ஓட்டங்களைக் கடந்து அவுஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்து அணியுடனான 6 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 334 ஓட்ட இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு333 ஓட்டங்களைப் பெற்றது. ஜொனதன் ட்ரொட் 126 பந்துவீச்சுகளில் 137 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரௌஸ் 69 பந்துவீச்சுகளில் 63 ஓட்டங்களையும் இயன் பெல் 32 பந்துவீச்சுகளில் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணி பெரும் எண்ணிக்கையான ஓட்டங்களைக் குவித்த போதிலும் அவ்வணி வெற்றி பெறுவதற்கு அது போதுமானதாக இருக்கவில்லை. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப எண்ணிக்கையான பந்துவீச்சுகளில் அதிக எண்ணிக்கையான ஓட்டங்களைப் பெறுவதற்கு முயற்சித்தனர்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது. மைக்கல் கிளார்க் 70 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ரொட் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி 5-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. 7 ஆவது போட்டி பெப்ரவரி 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது

No comments:

Post a Comment